Navz-47 - Varigal (Freestyle)

Varigal - வரிகள்! follow @navz47 on IG for more #47whipseries Written, Composed, Sung and Performed by @Navz-47 Shot by @kolanshan Produced by @gachib Studio @kroosmusic நான் பாடும் பாட்டில், வரிகள் இல்லை வலிகள். வலிகள் தந்த வழிகள் - பெரியோர் சொல்லி கொடுத்த புத்திமதிகள். ஏளனமாய் பார்த்து சிரிக்கும் மு‌ன்பு உன் முதுகை பார், அழுக்கு ஆறாய் ஓடுது அதை நீ சுத்தம் செய்வாய். குறை காணும் கண்ணுக்கு உழைப்பவர் கஷ்டம் புரியாது. என்னை விரும்பும் ம‌க்களு‌க்கு நிறை காணும் வழக்கம் உண்டு. என் புகழை தடுக்க புயல் கூட முன்வராது, அழுக்கில் இருந்து உதிர்த்து வந்த அற்புதம் அழியாது. என் வெற்றி உந்தன் தோல்வி அல்ல நண்பா. என் தோல்வி உனக்கு கொண்டாட்டமா? உன்னை உயர்த்தி விட கைகள் காத்திருக்கு தென்பா - அன்பாய் பழகி பார்த்தால் Navz சின்ன பிள்ளை தான். என்னை போல் நீ இல்லை அதுவே உந்தன் சக்தி பலசாலிக்கு தேவையில்லை சூழ்ச்சி செய்யும் புத்தி. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் புரிந்து கொண்டால் வெற்றி. என் இசையை கேட்க வந்தவர்க்கு மனமார்ந்த நன்றி!
Back to Top